சமுர்த்தி நிவாரண உதவிக்கான விண்ணப்பப் படிவம்

வறுமையை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி நிவாரணத் திட்டத்துக்காக புதிய உதவி பெறுபவர்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பொருட்டு விண்ணபங்களையும், மேன்முறையீடுகளையும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளார்.

விண்ணப்பப்படிவம் அல்லது மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கும் போது பின்வரும் முறையை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போது சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானத்தையுடைய குடும்பங்களின் பிரதான குடியிருப்பாளரால் பின்வரும் தகவல்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்பட்டு பிரதேசத்தின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பிரதான குடியிருப்பாளரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, குடும்பத்தின் தற்போதைய வருமானம், அதைப்பெற்றுக் கொள்ளும் வழி உட்பட மேலதிக விபரங்களை உட்படுத்தப்பட வேண்டும்.

சமுர்த்தி நிவாரணத்தை எதிர்பாரத்து இதுவரை விண்ணப்பித்த பலதர்ப்பட்டவர்களுக்கும் / திணைக்களத்திற்கு விண்ணப்பித்தவர்களும் புதிய நடைமுறைக்கமைய மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

சமுர்த்தி நிவாரணத்துக்காக விண்ணப்பிக்கும் குடும்பம் பொருளாதார ரீதியில் பலமடைய முடியுமென்ற தகுதியை கொண்டிருக்க வேண்டும். அத்தகைய வேலைத்திட்டமொன்றில் செயற்பாட்டு ரீதியில் பங்கேற்க கூடியவராக இருக்க  வேண்டும்.

விண்ணப்பதாரி ஃ குடும்ப உறுப்பினர்கள் சமுர்த்தி வேலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபடவும் அதனூடாக தனது பொருளாதார நிலையை மேம்படுத்தக்கூடியதுமான உறுதி கொண்டவராக இருக்க வேண்டும்.

சமுர்த்தி நிவாரண விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்கப்படும் போது தகைமையைக் கொண்ட குடும்பங்கள் அறிவுறுத்தப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை பிரதேச மக்கள் பிரதிநிதிகளும் / சிவில்  அமைப்புக்களும் மேற்கொள்ள முடியும்.

கிடைக்கும் விண்ணப்பங்களை ஆராய்வதற்கும், சிபாரிசு செய்வதற்கும்  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகார உட்பட பிரிவு மட்ட கிராமிய கமிட்டியொன்று செயற்படும் இது விடயத்தில் பிரதேச செயலாளர் முக்கிய கவனமெடுத்து தேவைக்கேற்ப விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பார். சில சந்தர்ப்பங்களில் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்களை கையாளும் நிலையும் ஏற்படும்.

சமுர்த்தி திட்டம், குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களை தேசிய அபிவிருத்தியில் பங்களிக்கச் செய்யும் திட்டமாதலால் அதற்கான தகைமை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

2018 ஜூலை 31ஆம் திகதி வரை கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் முதற்கட்டமாக பிரதேச செயலக மட்டத்தில் பரிசிலிக்கப்பட்டு முன்னுரிமை பட்டியலுக்குள் உட்படுத்தப்பட்டு சமுர்த்தி வேலைத்திட்டத்தின் உதவி பெறுநகராக அடையாளப்படுத்தப்படுவர்.