Grama Niladhari Services
Online Application : Open Competitive Examination for Recruitment to Grade III of Grama Niladhari 2020 (2021) – State Ministry of Home Affairs.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு
கிராம அலுவலர் III ஆம் தரத்துக்குச் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2020 (2021)
நாடூ பூராகவும் உள்ள பிரதேச செயலாளர் பகுதிகளில் வெற்றிடங்கள் நிலவும் கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம அலுவலர்களை நியமிப்பதற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்துகொள்வதற்காக நடாத்தப்படும் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக தகைமைகள் உள்ள ஆண்/பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படூகின்றன.
போட்டிப் பரீட்சை பற்றிய விபரங்கள்
இப்பரீட்சை சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் எனும் மொழிகளில் நடாத்தப்படும். எனினும் பரீட்சை மத்திய நிலையமொன்றைத் தாபிக்க போதுமானளவு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்காத மாவட்டங்களிலுள்ள விண்ணப்பதார்கள் அருகிலுள்ள பிறிதொரு பரீட்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படூவார்கள். விண்ணப்ப தாரர்கள் ஒரு மொழியில் மாத்திரம் தோற்றுதல் வேண்டூம். விண்ணப்பிக்கப்படூம் மொழி மூலம் பின்னர் மாற்றப்படூவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
கிராம அலுவலர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான பரீட்சை கீழ்க்குறிப்பிடப்பட்ட இரு வினாப்பத்திரங்களைக் கொண்டது.
- மொழியாற்றல் 1 1/ 2 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்
- பொது அறிவும், உளச்சார்பும் – 1 1/2 மணித்தியாலங்கள் 100 புள்ளிகள்.
கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சை 2020/2021
- 2020(2021) தேர்வு அறிவிப்பு தொடர்பாக 28/05/2021 அந் திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரரின் எண் 2,230 இன் அரசிதழில் வெளியிடப்பட்ட கிராம உத்தியோகித்தர் தரம் III ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சை.
- கூறப்பட்ட அறிவிப்பின் படி 9.1 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் அழைப்பற்கான இறுதித் திகதி 2021/07/19 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் திகதி 2021/06/28 ஆக மாறாமல் உள்ளது
- மேலும் இந்த பரிட்சைக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக www.donets.lk என்ற வலைத்தனத்தில் தேவையான அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வலைத்தளத்தினை பார்வையிட்டு அங்குள்ள வழிமுறை ளை பின்பற்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவும்.
- இந்த பரிட்சைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள பரீட்சாத்திகள் மீள விண்ணப்பிப்பது அவசியமில்லை
Gazette (Sinhala) | Download |
Application (Sinhala) | Download |
Gazette (English) | Download |
Gazette (Tamil) | Download |
Application (Tamil) | Download |
Amended | Download |
Online Application | Open |
Closing Date: 19/07/2021
Source: Gazette 28/05/2021