Landscaping Assistant Training Course NVQ Level – 04
பேராதனை – தேசிய தாவரவியல் பூங்காத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறிக்காக ஆண் / பெண் இரு பாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தேவையான தகைமைகள்
க.பொ.த. சா/த பரீட்சையில் 06 (ஆறு) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
வயது
18 மற்றும் 35 வயதிற்கிடைப்பட்டிருத்தல் வேண்டும்.
கற்கை நெறிக் காலம்
முழுமையான கற்கை நெறிக் காலம் 10 மாதங்கள். முதல் 04 மாதங்கள் – மலர்ச் செய்கை மற்றும் பூங்கா அலங்கார பாடசாலையில் உடல் ரீதியான மற்றும் செயன்முறைப் பரீட்சை (முழு நேரம்) இரண்டாவது 06 மாதங்கள் – பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் அல்லது விடயத் துறைக்கு இயைபான நிறுவனமொன்றில் உள்ளகப் பயிற்சி (முழு நேரம்).
மொழி ஊடகம் சிங்களம்
அறவீடூகள் இலவசம்
Source: Thinakaran, Daily news 16/04/2021
Website: http://www.tourismmin.gov.lk