கல்வித் தகைமைகள்
விண்ணப்பதாரி க.பொ.த (சா.த)பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
க.பொ.த (உ.த) பாரீட்சையில்
- பொருளியல்,
- விவசாயம்,
- இணைந்த கணிதம்,
- கணக்கியல்,
- வணிக புள்ளிவிபரவியல்
- வணிகக் கல்வி
ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் (பொது வினாத்தாள் நீங்கலாக) ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
தொழில்சார் தகைமைகள் :-
விண்ணப்பதாரி பொல்கொல்லையில் அமைந்துள்ள, கூட்டுறவு அபிவிருத்திக்கான தேசியநிறுவனத்தினால் நடாத்தப்படும் உயர் கணக்கியல் ((Higher Accountancy)/ கணக்காய்வு (Auditing) / முகாமைத்துவம் (Management) ஆகிய கற்கை நெறிகளில் ஒன்றில் டிப்ளோமா அல்லது வட மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படும் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான உயர் மடட் கற்கைநெறியில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் (Association of Accounting Technician – AAT) இறுதி மட்டத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் கல்வி நிறுவனங்கள் அல்லது உள்ளூரில் நிறுவப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் கணக்கியல் அல்லது முகாமைத்துவத்தில் டிப்ளோமாவினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
இலங்கை பட்டயகக் கணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்படும் பட்டயக் கணக்காளர் பரீட்சையில் (Chartered Accountancy Examination) இடைநிலைத்தரத்தில் (Intermediate) சித்தியடைந்திருத்தல் வேண்டும்
அல்லது
தேசிய உயர் தொழில்நுடப் கல்லூரியிலிருந்து கணக்கீடு தொடர்பான 04 வருட உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
தேசிய உயர் தொழில்நுடப் கல்லூரியிலிருந்து வணிக நிர்வாகம் தொடர்பான 03 வருட உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழில்
சிங்களத்தில்