Open Competitive Examination for Recruitment to the Post of Technical Officers in North Central Province 2021
- Technical Officer (Electrical) III
- Technical Officer (Mechanical) III
- Technical Officer (Civil) III
- Technical Officer (Civil) Trainee (01 Year)
- Technical Officer (Civil) Trainee (02 Years)
வடமத்திய மாகாண அரசாங்க சேவையின் பின்வரும் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி 2021/08/31ஆம் திகதியாகும் என்பதுடன் ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை 2021 நவம்பர் மாதத்தில் அநுராதபுரம் நகரத்தில் நடாத்தப்படவுள்ளது.
- தொழில்நுட்ப அதிகாரி (மின்சாரம்) iii ஆம் தரம்
- தொழில்நுட்ப அதிகாரி (பொறிமுறை) iii ஆம் தரம்
- தொழில்நுட்ப அதிகாரி (சிவில்) iii ஆம் தரம்
- தொழில்நுட்ப அதிகாரி (சிவில்) பயிலுநர் தரம் (ஒரு வருடம்)
- தொழில்நுட்ப அதிகாரி (சிவில்) பயிலுநர் தரம் (இரண்டு வருடங்கள்)
கல்வித் தகைமைகள் மற்றும் தொழில்சார் தகைமைகள்:
- அனைத்து பதவிகளுக்குமான கல்வித் தகைமைகள்:
- க.பொ.த. (சா.தரம்)
மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் இன்னுமொரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் - க.பொ.த. (உ.தரம்)
பிரயோகக் கணிதம் / தூய கணிதம் / இணைந்த கணிதம் மற்றும் பௌதிகவியல் / பொறியியல் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் சகிதம் க.பொ.த. (உயர்தரப்) பரீட்சையில் விஞ்ஞானம் / கணிதம் / தொழில்நுட்பவியல் எனும் விடயப்பரப்புகளில், ஒரு விடயப்பரப்பில் 03 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.
தொழில்சார் தகைமைகள்
தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப அதிகாரி iiiஆம் தரம் (சிவில்/பொறிமுறை/மின்சாரம்)
i. மொரட்டுவ பல்கலைக்கழகம் அல்லது அம்பாறை ஹாடி தொழில்நுட்ப நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா
அல்லது
ii. தேசிய பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையினால் வழங்கப்படும் பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா
அல்லது
iii. கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா
vi. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் தொழில்நுட்ப டிப்ளோமா
அல்லது
v. இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் பொறியியல் பரீட்சையில் முதலாம் பகுதியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருத்தல்.
அல்லது
vi. தொழிற்றுறைக்குச் சார்பான தேசிய வாழ்தொழில் திறனின் (NVQ 06) 06வது மட்டத்தகைமையைப் பூர்த்தி செய்திருத்தல்
அல்லது
vii. உயர்கல்வி அமைச்சு மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட தொழில்நுட்ப சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களில் விசாரித்து, கருத்துக்களைப் பெற்றுக்கொண்டதன் பின் மேற்படி தொழில்நுட்பத் தகைமைகளுக்கு அனைத்து விதத்திலும் சமமானதென மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்பத் தகைமைகள்.
Gazette Sinhala | Download |
Gazette Tamil | Download |
Application Form | Download |
Source – Dinamina (2021.07.16)