ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அனுமதி – 2021
இலங்கை கல்வியமைச்சினால் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்லூரியினால் இரண்டு வருடகால ஆசிரியர் பயிற்சியை வழங்குதல் – 2021க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான தகைமையுடையவர்கள்:
1. அரச பாடசாலைகளில் சேவையாற்றும் பயிற்றப்படாக ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள்
2. கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலுள்ள அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நியமனத்தைப் பெற்றுள்ள ஆசிரியர்கள்
3. பதிவு செய்யப்பட்ட பிரிவெனாக்களில் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நியமனத்தைப் பெற்றுள்ள பிரிவெனா ஆசிரியர்கள்
4. மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தினால் அமூல்படுத்தப்பட்ட தொலை,
பிரின்செட், ஆசிரியர் கல்லூரிகளின் பழைய பாடவிதானம், பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர் பாடநெறியினை தொடர்ந்து தோல்வயிமைந்ததாக உரிய ஆசிரியர் பயிற்சிப் பொறுப்பாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்
விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்
1. சிங்களம்
2. ஆரம்பக் கல்வி
3. சமூக விஞ்ஞானம்
4. விஞ்ஞானம்
5. கணிதம்
6. விவசாய விஞ்ஞானம்
7. மனைக்கல்வி
8. ஆங்கிலம்
9. பௌத்த சமயம்
10. கிறிஸ்தவ/ரோமன் கத்தோலிக்க சமயம்
11. இந்து சமயம்
12. இஸ்லாம்
13. சித்திரம்
14. சங்கீதம்
15. நடனம்
16. அரபு
17. விசேட கல்வி
18. கைத்தறி கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பம்
19. வர்த்தகம்
20. தமிழ்
21. உடற்கல்வி
22. இரண்டாம் மொழி (சிங்களம்/தமிழ்)
23. தகவல் தொழில்நுட்பம்
24. ஆலோசனை
25. நூலக விஞ்ஞானம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director of EducationTeacher Education Administration Branch,Ministry of EducationIsurupaya,Battaramulla